குளம்போல் தேங்கிய மழைநீர் க.பரமத்தி ஒன்றியத்தில் திமுக கிராம சபை கூட்டம்

க.பரமத்தி, ஜன.22: கரூர் ஒன்றியம் மற்றும் க.பரமத்தி வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அதியமான்கோட்டையில் நடந்த கூட்டத்திற்கு கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நொய்யல் சேகர் (எ) குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தனது சொந்த செலவில் புதிய இரு சக்கர வாகனத்தை வழங்கினார். இதேபோல க.பரமத்தி வடக்கு ஒன்றிய சார்பில் குப்பம் ஊராட்சி சாலிபாளையம் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான கார்த்திக் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மினிபேருந்து வசதி, உழவர்சந்தை, 108 அம்புலன்ஸ், விவசாய கடன் 7 ஆயிரம் கோடி தள்ளுபடி, இலவச தொலைக்காட்சி பெட்டி, அனைவருக்கும் இலவச எரிவாயு அடுப்புடன் கொண்ட இணைப்பு வசதி, கலைஞர் காப்பீட்டுதிட்டம், எண்ணற்ற மேம்பாலங்கள், தொகுப்பு வீடுகள், மகளிர் சுய உதவிக்குழுக்கு செயல்பாடுகள், ஏழை எளியோருக்கு தரமான கிலோ ரூ.2க்கு அரிசி, வீடுகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இப்படி என்னற்ற திட்டங்களை இன்றும் மக்கள் நினைவில் நினைத்து நிற்கின்றன. திமுக ஆட்சி காலத்தில் செய்த அறிய பல திட்டங்களை பொதுமக்களிடத்தில் எடுத்து கூறி வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைழுத்து இயக்க பேனரில் கையெழுத்திட்டனர்.

Related Stories:

>