தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை

மதுரை, ஜன.22: வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யன்ேகாட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(28). இவரது உறவினர் வீட்டுக்கு கடந்த 2013ல் பிள்ளையார் நத்தம் வயலூரை சேர்ந்த மோகனதீபா(24) என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாலசுப்ரமணியன், மோகனதீபாவை மானபங்கபடுத்தும் வகையில் தவறாக நடந்து கொள்ள முயன்றார். இதனால் மனமுடைந்த மோகனதீபா தற்கொலை செய்தார்.

தற்கொலைக்கு தூண்டியதாக வாடிப்பட்டி போலீசார் பாலசுப்ரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.  அரசு வக்கீல் தங்கம் வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் முடிந்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார். இதில், பாலசுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.

Related Stories:

>