×

2 விநாடிகளில் 700 கிமீ வேகம் சீனா ரயில்வே உலக சாதனை

பெய்ஜிங்: சீனா மாக்லேவ் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய ரயில் 2 விநாடிகளில் மணிக்கு 700கி.மீ. வேகத்தில் சென்று உலக சாதனை படைத்துள்ளது. சீனாவில் அதிவேக ரயில்கள் மணிக்கு 217கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. மேலும் நீண்ட சுரங்கப் பாதைகளில் கூட 5ஜி இணைப்பை ஆதரிக்கின்றன. நீண்ட தூர வணிக பயணிகள் விமானத்திற்கான சராசரி பயண வேகம் மணிக்கு 547 முதல் 575 மைல் வரை இருக்கும்.

இந்நிலையில் சீனா மாக்லேவ் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய ரயிலை நேற்று சோதனை செய்தது. இந்த சோதனையின்போது ரயில் இரண்டு வினாடிகளில் மணிக்கு 700கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது. மாக்லேவ் ரயில் 400மீட்டர் காந்த லெவிட்டேஷன் சோதனைப் பாதையில் சோதிக்கப்பட்டது.

பின்னர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. ரயிலின் சோதனை வேகமானது ஒரு புதிய மைல்கல்லை அமைத்து உலகின் அதிவேக மீக்கடத்தி மின்சார மாக்லேவ் ரயிலாக ஆனது. இந்த ரயிலின் சோதனை ஓட்ட வீடியோ காட்சியை சீனாவின் அரசு தொலைக்காட்சி கடந்த வியாழன்று ஒளிபரப்பியது. அதிவேக மாக்லேவ் தொழில்நுட்பத்தில் சீனா உலக உயர்மட்டத்தில் நுழைவதை இந்த சோதனை சமிக்ஜை செய்துள்ளது.

Tags : China Railway ,Beijing ,China ,
× RELATED தைவானின் வடகிழக்கு கடலோர நகரமான...