×

ஒட்டன்சத்திரம் அருகே மக்கள் கிராம சபை கூட்டம்

ஒட்டன்சத்திரம், ஜன. 22: ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் கரியாம்பட்டி, அப்பியம்பட்டி பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற முழக்கத்துடன் தீர்மானம் நிறைவேற்றி, அனைவரும் கையொப்பமிட்டனர். இதில் எம்பி வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணை தலைவர் பொன்ராஜ், ஒன்றிய துணை தலைவர் தங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Village Council ,Ottanchattiram ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...