×

வேடசந்தூரில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி சொத்துக்களை பலருக்கு விற்று மோசடி தந்தை, மகன்களுக்கு வலை

திண்டுக்கல், ஜன. 22: கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (54). இவரது தந்தை முகமது இப்ராகிமிற்கு 2 மனைவிகள். இவர் கடந்த 1995ம் ஆண்டு இறந்து விட்டார். அதற்கு முன்பாகவே கடந்த 1963ல் முகமது இப்ராகிம் வேடசந்தூரில் உள்ள 10 ஏக்கர் நிலங்கள், வீடுகள் என பல கோடி மதிப்புளள சொத்துக்களை தனது 2வது மனைவி மகன் ஷாஜகான் மற்றும் அவரது சகோதரிகளுக்கு பாக பிரிவினை செய்து கொடுத்து விட்டார். முகமது இப்ராகிமின் 2 மனைவி குடும்பத்தாருக்கும் இந்த பாக பிரிவினை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே வேடசந்தூரை சேர்ந்த ஜமால் அகமது, அவரது மகன்கள் ஜெய்னுலாப்தீன், வாசிம் ராஜா ஆகியோர் திட்டம் தீட்டி முகமது இப்ராகிமின் முதல் மனைவி ஹைரு நிசாவின் மகன் தாஜூதீன்ல மகள் ஜீனத் பீவி ஆகியோரிடம் பொது அதிகார பத்திரத்தை பெற்றனர். பின்னர் அதன்மூலம் சொத்துக்களை மோசடியாக கடந்த 2013ம் ஆண்டு கிரயம் செய்துள்ளனர். தொடர்ந்து அந்த சொத்துக்களை பிளாட் போட்டு வேறு பல நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதையறிந்த ஷாஜகான், இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். அதில், தன் குடும்ப சொத்துக்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்து விற்று விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜலால் முகமது, ஜெய்னுலாப்தீன், வாசிம்ரானா ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி மதிப்புள்ள ஷாஜகானின் சொத்துக்களை விற்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாகவுள்ள 3 பேரையும் தேடிவருகின்றனர்.

Tags : sons ,Vedasandur ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி