×

நாளை திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் எஸ்.ஆர்.சிவலிங்கம் அறிக்கை

ஆத்தூர், ஜன.22: சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை; சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், நாளை (23ம் தேதி) காலை 10 மணியளவில்  வாழப்பாடியில் உள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி எம்பி கௌதம் சிகாமணி, சேலம் எம்பி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர். எனவே, சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய நகர, பேரூர், கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.    

Tags : DMK ,SR Sivalingam ,
× RELATED அதிமுகவினர் 43 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்