பஸ் ஸ்டாண்டிலில் புதிய தீ செயலி விழிப்புணர்வு

நாமக்கல், ஜன.22: நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், தீயணைப்பு துறை சார்பில் புதிய தீ செயலி குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்புத்துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்த புதிய செயலி தீ என்ற பெயரில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு நாமக்கல்லில் நேற்று பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்து செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். தீ விபத்து ஏற்படும் அவசர காலத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையை தொடர்பு கொள்ள ஏதுவாக புதிய செயலியை எவ்வாறு செயல்படுத்து குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு நோட்டீஸை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் தவமணி, நிலைய அலுவலர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.திருச்செங்கோடு: திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில், பொதுமக்களிடையே துண்டுபிரசுரங்கள் வழங்கியும், ஒலி பெருக்கி மூலம் தீயணைப்பு வாகனத்துடன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>