வணிக நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்

நாமக்கல், ஜன.22: நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும், தொழிலாளியின் பங்காக10 ரூபாய், வேலையளிப்பவரின் பங்காக 20 ரூபாய் என மொத்தம் 30 ரூபாய் வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையாக, சம்மந்தப்பட்ட நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2020ம் ஆண்டுக்கான நல நிதியை வரும் 31க்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இந்நிதியை, செயலாளர் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு வங்கி வரை வோலையாக வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>