மானியத்தில் சொட்டு நீர் பாசனம் திட்டம்

பள்ளிபாளையம், ஜன.22: மாடி தோட்டம் அமைத்து, அதற்கு சொட்டு நீர்பாசனம் அமைத்துகொள்ள, தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மூலம், பள்ளிபாளையம் பகுதியில் 150 வீடுகளில் மாடி தோட்டம் அமைக்கவும், பின்னேற்பு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.இதன்படி மாடித்தோட்டம் அமைப்பதற்கு ₹850ம் தளை, மானிய விலையாக 510 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் அமைத்துக்கொள்ள, பாசன சாதனங்களும் பின்னேற்பு மானியத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு பயனாளிகள்  ₹1000 செலுத்தினால், பின்னேற்பு மானியமாக 400 பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். திட்டத்தின் துவக்க விழா ஆலாம்பாளையத்தில் நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் செந்தில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரகாஷ், மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றியங்களின் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள், பள்ளிபாளையம் தோட்டக்கலைத்துறையிரை அனுகலாம் என உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>