முன்னாள் அதிமுக ஒன்றியக்குழு தலைவர் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்

ஓசூர், ஜன.22: ஓசூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரான புஷ்பா சர்வேஷ், அதிமுகவில் இருந்து விலகினார். பின்னர், தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார். நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, ஓசூர் மாநகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ, ஓசூர் ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா முன்னிலை வகித்தனர்.

புஷ்பா சர்வேஷூடன், அதிமுக முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சர்வேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுநாதரெட்டி, மரியப்பா, முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்த், பைரப்பா, ராமலிங்கம், ராமரெட்டி, வெங்கடசாமி ரெட்டி, முருகேஷ், வெங்கடசாமி, விக்ரம் ரெட்டி, கோபால், மஞ்சுநாத், சிவப்பா, ஒன்றிய செயலாளர் அன்வர்பாஷா, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாசில் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சால்வை அணிவித்து வரவேற்றார்.

Related Stories:

>