10மாதங்களுக்கு பிறகு திறப்பு அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

தர்மபுரி, ஜன.22: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நோய் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில், 10மாதங்களுக்கு பிறகு, கடந்த 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளியில் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாணவர்கள் பள்ளியில் படிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில், தொடர்ச்சியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என, மாவட்ட கலெக்டர் கார்த்திகா திடீரென ஆய்வு செய்து வருகிறார். நேற்று தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: