புதுடெல்லி: இந்தியாவின் 13வது பிரதமர் மன்மோகன்சிங் முதுமை காரணமாக கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தனது 92வது வயதில் காலமானார். மன்மோகன் சிங்கின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங்கின் திருவுருவ படத்துக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
