×

மாணவி தற்கொலை முயற்சி 14 மாணவர்கள் சஸ்பெண்ட்

கரூர்: கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக்கல்லூரியில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி, கல்லூரிக்கு அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்து முதலாமாண்டு பயின்று வருகிறார். இந்த மாணவி, ஒரு பேராசிரியருக்கு மட்டும் ஆதரவாக பேசி வருவதாக, மற்ற மாணவ, மாணவிகள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த அந்த மாணவி, கடந்த 20ம்தேதி தங்கியிருந்த விடுதியில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற் கொலைக்கு முயன்றார்.இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்த மாணவி, குணமாகி சொந்த ஊர் சென்று விட்டார். இந்த சம்பவத்துக்கு காரணமான த 14 மாணவர்கள் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய் யப்பட்டனர்.

Tags : Karur ,Tirunelveli ,Government Arts College ,Thanthonimalai, Karur ,
× RELATED பொருநை அருங்காட்சியகத்திற்கு...