வெர்ட் ஸ்கூல் ஆப் பேங்கிங் பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பயிற்சி

தர்மபுரி, ஜன.22: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே வெர்ட் ஸ்கூல் ஆப் பேங்கிங் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி நிறுவனத்தில், டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றனர். சமீபத்தில், இப்பயிற்சி நிறுவனத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய 20பேரில் 14பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த 14பேரில் 10பேர் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 7பேர் வேளாண் அலுவலர்களாகவும், 3பேர் தோட்டக்கலை அலுவலர்களாகவும், வேலூர் மண்டலத்திலும், திருச்சி மண்டலத்திலும் தற்போது பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், வரும் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களுக்கான, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வெர்ட் ஸ்கூல் ஆப் பேங்கிங் பயிற்சி மையத்தில் தொடங்குகிறது. இப்பயிற்சியை முன்னாள் தோட்டக்கலை உதவி இயக்குனர் முகுந்தன் ஒருங்கிணைப்பாளராக கொண்டு நடத்தப்படுகிறது

Related Stories: