ராதாபுரம் ஒன்றிய திமுக இளைஞர் அணி கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

ராதாபுரம், ஜன. 22:  திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் சமூகரெங்கபுரத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது.   இதில் முதலிடம் வென்ற துரைகுடியிருப்பு அணிக்கு ரூ.10 ஆயிரத்தை கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீசும், சுழற்கோப்பையை மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சியும் வழங்கினர். 2ம் இடம் வென்ற சமூகரெங்கபுரம் அணிக்கு ரூ.7 ஆயிரத்தை  வர்த்தக அணி ஒன்றிய அமைப்பாளர் குமாரும், சுழற்கோப்பையை மாவட்ட துணை அமைப்பாளர் முரளியும் வழங்கினர். 3ம் இடம்பிடித்த வள்ளியூர் அணிக்கு ரூ.4 ஆயிரத்தை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செழியனும், சுழற்கோப்பையை  இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் இசக்கிபாபுவும் வழங்கினர்.  4ம் இடத்தை பிடித்த சமூகை அணிக்கு ரூ.2 ஆயிரத்தை கலை இலக்கிய அணி ஒன்றிய அமைப்பாளர் கருணைராஜூவும், சுழற்கோப்பையை இளைஞர் அணி முருகனும் வழங்கினர். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 36 அணியினருக்கும் சீருடைகளை இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.

Related Stories:

>