பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் இருவர் கைது

நாங்குநேரி, ஜன. 22:   நாங்குநேரி எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார், நாங்குநேரி ரயில்வேகேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கில் வந்த இருவரை தடுத்துநிறுத்தியதோடு பைக்கில் சோதனை மேற்கொண்டது. இதில் 250 கிராம் கஞ்சாவை பொட்டலங்களாக பதுக்கி கடத்திகொண்டுவந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த காசிமுத்து மாணிக்கம் (34),  பேச்சிமுத்து (32) என்பதும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி முத்துராமலிங்கம் என்பவரிடம் மொத்த விலைக்கு வாங்கிக்கொண்டு நாங்குநேரி பகுதியில் விற்பனைக்கு கொண்டுசென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து புகையிலைப் பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், இருவரையும் கைதுசெய்ததோடு 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தன

Related Stories:

>