சுரண்டை பஸ் நிலைய புறக்காவல் நிலையம்

சுரண்டை, ஜன. 22:  சுரண்டை பஸ் நிலையம் முன் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை எஸ்.பி. சுகுணாசிங் திறந்துவைத்தார்.  சுரண்டையில் குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்தை கண்காணிக்கவும் சுரண்டை பஸ் நிலையம் முன்பாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதையொட்டி சென்னை டிஎஸ் குழுமத்தின் சார்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள், பஸ் நிலைய சாலையில் ஒலிபெருக்கி ஆகியன அமைக்கப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் மற்றும் ப்ரியா குரூப்ஸ் சார்பில் அமைக்கப்பட்ட இந்த புறக்காவல் நிலையத்தை எஸ்.பி.  சுகுணா சிங் திறந்துவைத்தார். மேலும் கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைத்தார். விழாவுக்கு டிஎஸ் குழுமத்தின் சார்பில் ஸ்டீபன் ரத்தீஸ் முன்னிலை வகித்தார். சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வரவேற்றார். விழாவில் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னி வளவன், எஸ்.ஐ.ஜெயராஜ், சிறப்பு எஸ்ஐ செய்யது இப்ராகிம், சுரண்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராஜ், பொருளாளர் தனபால், துணைத்தலைவர் சிவசக்தி முத்தையா, செய்தி தொடர்பாளர் ராஜகுமார், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ஜேக்கப், செல்வக்குமார், ஆபிரகாம், ஜெபராஜ், ஸ்டீபன் ஜெபராஜா, ஜெகன், ஞானராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: