பைக் மோதி தொழிலாளி காயம்

களக்காடு, ஜன. 22:  களக்காடு அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் தொழிலாளி படுகாயடைந்தார். களக்காடு அருகே படலையார்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (66). தொழிலாளியான இவர், சம்பவத்தன்று களக்காட்டில் பொருட்கள் வாங்கிகொண்டு தனது சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரே படலையார்குளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்து என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த பைக், கிருஷ்ணன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் முத்து மீது களக்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: