வள்ளியூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

வள்ளியூர், ஜன. 22:  வள்ளியூரில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. பங்கேற்றார்.  வள்ளியூரில் 10, 11வது வார்டு பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. வள்ளியூர் புதிய பஸ் நிலையம் எதிரே நடந்த கூட்டத்திற்கு பேரூர் செய்லாளர் சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் இ.எஸ்.கிருஷ்ணன், ஒன்றிய அவைத்தலைவர் சிவராமகிருஷ்ணன்,  இளைஞர் அணி பேரூர் அமைப்பாளர் தில்லைராஜா  முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஞானதிரவியம் எம்.பி., மக்களிடம் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். தெற்கு  ஒன்றியச் செயலாளர் செட்டிகுளம் விஜயன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் மாடசாமி, நம்பி சிறப்புரையாற்றினார்.  இதில் மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் எரிக் ஜூட், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மந்திரம், விவசாயத் தொழிலளார் அணி கே.சி ராஜா, மாவட்டப்    பிரதிநிதி, ஆச்சியூர் ராமசாமி, ராதாகிருஷணன், அன்பரசு, காதர்மைதீன், மாநில பேச்சாளர் பனிபாஸ்கர், மகளிர் அணி பேரூர் அமைப்பாளர் விசாலட்சி, இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர்  முத்துகிருஷ்ணன், மாணவர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, பேரூர் துணைச்செயலாளர் நயினார், முன்னாள் கவுன்சிலர் வி.கே ரவி, இசக்கியப்பன், வார்டு செயலாளர்கள் லட்சுமணன், ஆறுமுகம், சுபா நடராஜன், முத்துகிருஷ்ணன், கண்ணன், லாரன்ஸ், சிபா மூர்த்தி, சண்முகவேல், கலை இலக்கிய பகுத்தறிவுபேரவை அண்ணாநகர் மகேஷ், 4வது வார்டு அவைத்தலைவர் அருமைராஜ், செல்லையா, கண்மணி, ஆறுமுகம், கண்ணன், முகமது அலி,  பரமேஸ்வரன்,     தங்கப்பாண்டியன், பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 10வது வார்டு செயலாளர் சிவநம்பி நன்றி கூறினர்.

Related Stories:

>