கோவில்பட்டி மத்திய கூட்டுறவு வங்கியில் 345 பயனாளிகளுக்கு ரூ.2.35 கோடி கடனுதவிகள்

கோவில்பட்டி, ஜன. 22: கோவில்பட்டி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 345 பயனாளிகளுக்கு ரூ.2.35 கோடி கடனுதவிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ வழங்கினர். கோவில்பட்டியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 25வது கிளை திறப்புவிழா நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். வங்கி கிளையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கேற்றினார்.  தொடர்ந்து, புதுரோட்டில் மத்திய கூட்டுறவு வங்கி பிரதான கிளை வளாகத்தில் ஏ.டி.எம். மையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் நெல்லை மண்டலம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்கை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 345 பயனாளிகளுக்கு ரூ.2.35 கோடி கடனுதவிகளை வழங்கி பேசும்போது,  கூட்டுறவு வங்கிகளை வருமானவரி செலுத்தும் அளவுக்கு உயர்த்தியுள்ளோம். 27 ஆயிரமாக இருந்த ரேஷன்கடைகள் தற்போது 33,030ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 3501 நகரும் ரேஷன்கடைகள் துவக்கியுள்ளோம். தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளை உயர்த்தி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 4500 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை 21 விருதுகளை பெற்றுள்ளது என்றார்.

நேஷனல் பொறியியல் கல்லூரியில் பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா பயிற்சி வகுப்பை அமைச்சர் கடம்பூர்ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் கோவில்பட்டி ஒன்றியம் கோபாலபுரம், நாச்சியார்பட்டி பகுதிகளில் நகரும் ரேஷன்கடையினை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கினார்.

விழாவில், சின்னப்பன் எம்எல்ஏ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்.தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகரன், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, துணைசேர்மன் பழனிசாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைசேர்மன் சுப்புராஜ், அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளர் சவுந்தரராஜன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாணவரணி செயலாளர் விநாயகா முருகன் மற்றும் பாபு, ஆபிரகாம் அய்யாத்துரை, அருணாசலசாமி, போடுசாமி, ஆர்டிஓ விஜயா, தாசில்தார் மணிகண்டன், பிடிஓக்கள் சசிகுமார், ஐகோர்ட்ராஜா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ரவிச்சந்திரன், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் சிவகாமி, துணை பொதுமேலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: