கலசபாக்கம் பகுதிகளில் மயிலார் வழிபாட்டுடன் நெசவு பணிகள் தொடக்கம்

கலசபாக்கம், ஜன.22: கலசபாக்கம் பகுதிகளில் மயிலார் வழிபாட்டுடன் நெசவு பணிகள் மீண்டும் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை ெதாடர்ந்து மயிலார் பண்டிகையை கொண்டாடி முடித்ததும் நெசவு தொழிலாளர்கள் தங்களது நெசவு பணிகளை தொடங்குவது வழக்கம். அதன்படி மயிலார் பண்டிகை தினமான நேற்று கலசபாக்கம் அடுத்த பழங்கோயில், காந்தப்பாளையம், மேலாரணி, வில்வாரணி, சிங்காரவாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நெசவாளர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தை திருநாளுக்கு பொங்கல் வைப்பதுபோல் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டனர். அப்போது, கடந்த 9 மாதத்திற்கும் மேலாக கொரோனா பரவல் காரணமாக நெசவு தொழில் கடுமையாக பாதித்தது, இன்றைய தை திருநாளில் தங்களது வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டி சுவாமியை வழிபட்டு பணிகளை தொடங்கியுள்ளதாக நெசவு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>