×

சாலைபாதுகாப்பு ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் புதிய பஸ்நிலையத்தில்

வேலூர், ஜன.22: வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, வட்டாரபோக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை சார்பில் ெஹல்மெட் விழிப்புணர்வு வேலூர் புதிய பஸ்நிலையம் செல்லியம்மன் கோயில் அருகே நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வேலூர் சரக போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ், ஆர்டிஓ செந்தில்வேலன், டிஎஸ்பி விநாயகம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்திவேல், வெங்கட்ராகவன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஹெல்ெமட் விழிப்புணர்வு பேரணியில், வட்டார போக்குவரத்து துறை ஊழியர்கள், காவலர்கள் பைக்கில் ஹெல்மெட் அணிந்துகொண்டு கிரீன் சர்க்கிள் வழியாக அண்ணசாலை சென்று, நேதாஜி ஸ்ேடடியம் வரையில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல் வேலூர் ஊரிசு கல்லூரியில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஹெல்மெட் பேரணி நடந்தது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags : Road Safety Helmet Awareness Rally Collector ,Vellore ,bus stand ,
× RELATED வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் 11.03...