×

செங்கை மாவட்டத்தில் இன்று முதல்வர் பிரசாரம் கடை, சாலையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர்கள்: வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம்

திருப்போரூர். ஜன.21. செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, சாலை மற்றும் கடைகளை ஆக்கிரமித்து அதிமுகவினர் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப் பயணம் செய்கிறார். இதையொட்டி நேற்று |பெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

இதைதொடர்ந்து இன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இதற்காக நீதிமன்ற உத்தரவையும் மீறி ஓஎம்ஆர் சாலையில் அதிமுகவின் பல்வேறு கோஷ்டியினரும் வரவேற்பு வளைவுகள், பேனர்கள் அமைத்துள்ளனர். குறிப்பாக திருப்போரூர் கந்தசுவாமி கோயிலையும், திருக்குறளையும் மறைத்து 300 அடி நீளத்தில் பேனர் வைத்துள்ளதுள்ளனர். மதுராந்தகம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுராந்தகம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

அவரை வரவேற்க அதிமுகவினர் போட்டி போட்டு மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையொட்டியுள்ள கடைகளை ஆக்கிரமித்து பேனர்களை அமைத்துள்ளனர். இதனால், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது என சிரமம் அடைகின்றனர். மேலும், நேற்று காலை முதலே அதிமுகவினர் பேனர்களை அமைத்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்ததுடன், நீதிமன்ற உத்தரவை அதிமுகவினர் காற்றில் பறக்க விடுகின்றனர் என கூறி வேதனை அடைந்தனர்.

Tags : Chief Minister ,campaign shop ,district ,road ,Merchants ,Chennai ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...