கடை ஷட்டரை உடைத்து 7 செல்போன்கள், ரூ.40 ஆயிரம் கொள்ளை

பட்டாபிராம், ஜன. 21:   ஆவடி, கோவர்த்தனகிரியை சேர்ந்தவர் தினகரன் (43). இவர், பட்டாபிராம், பாபு நகர், அண்ணா தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். தினகரன் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர், நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடை உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த தினகரன் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அங்கிருந்த விலை உயர்ந்த புதிய 7 செல்போன்கள், ரூ.40 ஆயிரம்  ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கடையில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்

Related Stories:

>