காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஜன.21: பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி துறைமுகம், மரைன் இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள  காட்டுப்பள்ளி துறைமுகத்தின் திருத்தப்பட்ட முதன்மை திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், 22ம் தேதி காலை 11 மணியளவில், மீஞ்சூர் - காட்டூர் சாலை சந்திரபிரபு ஜெயின் கல்லூரி, பகவான் மகாவீர் அரங்கத்தில் நடைபெற இருந்தது.

மேற்படி பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டத்தில் மிக அதிக அளவிலான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொது  மக்களை கொரோனா தொற்று அபாயத்திலிருந்து பாதுகாப்பதன் பொருட்டு,  மேற்குறிப்பிட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என திருவள்ளுர் கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>