×

ஏரியில் மூழ்கி அரிசி வியாபாரி பலி

செய்யாறு, ஜன.21: செய்யாறு அருகே ஏரியில் மூழ்கி அரிசி வியாபாரி பரிதாபமாக பலியானார்.
செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(38). நரசமங்கலம் பகுதியில் அரிசி கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீரா. இவர்களுக்கு பூஜா என்ற மகளும், கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். ஆன்மிகவாதியான வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை மாமண்டூர் ஏரிக்கு சென்று வழிபாடு செய்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை மாமண்டூர் ஏரியில் வெங்கடேசன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், வெங்கடேசன் ஏரியில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடேசனின் சகோதரர் விஸ்வநாதன் கொடுத்த புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : lake ,
× RELATED திருமங்கலத்தில் டூவீலரில் லாரி மோதி அரிசி வியாபாரி பலி