கூடுதலாக 3 இடங்களில் மினி கிளினிக் வேலூர் மாநகராட்சியில்

வேலூர், ஜன.21: வேலூர் மாநகராட்சியில் கூடுதலாக 3 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம், சத்துவாச்சாரி, அணைக்கட்டு, கீழ்கொத்தூர், ஒதியாத்தூர், சித்தேரியிலும், கே.வி.குப்பம் காந்தி நகர், செஞ்சி, வண்டறந்தாங்கல், வள்ளிமலை ஆகிய 10 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது.

இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இயங்குகிறது. கிராமப்புறங்களில் மட்டும் இரவு 7 மணி வரை இயங்குகிறது. இதில் ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் கூடுதலாக காட்பாடி செங்குட்டை, கழிஞ்சூர், சின்ன அல்லாபுரம் ஆகிய 3 இடங்களில் மினி கிளினிக்குள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிளினிக்குகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. 10 நாட்களில் கூடுதலாக 3 இடங்களில் மினி கிளினிக்குள் திறக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>