வாடகை, வரி செலுத்தாத 1,000 பேருக்கு நோட்டீஸ் சீல் வைப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை வேலூர் மாநகராட்சியில்

வேலூர், ஜன.21: வேலூர் மாநகராட்சியில் வாடகை, வரியினங்கள் பாக்கி வைத்துள்ள 1,000 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சீல் வைப்பு நடவடிக்கைகளை தவிர்க்க உடனடியாக நிலுவை தொகையினை செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும், மாநகராட்சிக்கு ெசாந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சிக்கு பல லட்சங்கள் வருமானம் கிடைக்கிறது. இதில் பெரும்பாலான கடைக்காரர்கள் வாடகை பாக்கி செலுத்தாமல் உள்ளனர்.

அதேபோல் குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட வரியினங்களும் கோடிக்கணக்கில் பாக்கி உள்ளது.எனவே மாநகராட்சி முழுவதும் வாடகை, வரியினங்கள் பாக்கி வசூலிக்க மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் வசூல் செய்து வந்தனர். இதற்கிடையே தீபாவளி, பொங்கல் பண்டிகை என்பதால், மக்கள் நலன் கருதி சீல் வைப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாத சுமார் 1,000 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக வாடகை பாக்கி, வரியினங்கள் செலுத்தி சீல் வைப்பு நடவடிக்கையினை தவிர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் சீல் வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories:

>