விதவை சான்றுக்கு விண்ணப்பித்த பெண்களின் வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு

திருவில்லிபுத்தூர், ஜன.21: திருவில்லிபுத்தூரில் விதவை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பெண்களின் வீடுகளில் நேற்று சப்.கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற விதவைகள் தங்களுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு சென்று நேற்று சப்-கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்த சுமார் 15 பேர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவர்கள் நிலைமையை நேரில் கண்டறிந்து சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அவருடன் தாசில்தார் சரவணன் மற்றும் அதிகாரிகளும் சென்றனர்.

Related Stories:

>