பழமையான தெப்பக்குளத்தில் சகதியை அகற்றும் முத்துக்குளிப்பு வீரர்கள்

விருதுநகர், ஜன.21: விருதுநகரில் உள்ள பழமையான தெப்பக்குளத்தில் முத்துக்குளிக்கும் வீரர்கள் மூலம் சகதி அகற்றும் பணி தொடங்கியுள்ளது.  

விருதுநகர் நடுமையத்தில் 1866ல் உருவான 330 அடிநீளம், 298 அடி அகலம், 21 அடி ஆழத்தில் தெப்பக்குளம் பலசரக்கு கடை மகமை பராமரிப்பில் உள்ளது. 5.60 கோடி லிட்டர் மழைநீரை சேமித்து வைக்கும் வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளால் குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கிறது. இந்த தெப்பகுளத்தின் நடுமையத்தில் மைய மண்டபமும், 3 பக்கங்களில் கிணறுகளும் உள்ளன. ஆண்டு முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் நகரின் ஒரு கி.மீ சுற்றளவில் உள்ள குடியிருப்பு போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கிறது.

தற்போது முழு கொள்ளளவில் உள்ள தெப்பக்குளத்தில் 3 கிணறுகளில் இருக்கும் சகதி, சேறுகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது. இதற்காக தூத்துக்குடியிலிருந்து முத்துக்குளிக்கும் வீரர்கள் நேற்று வந்தனர். ஆக்சிஜன் சிலிண்டருடன் நீரில் மூழ்கி கிணறுகளுக்குள் சென்று குழாய்களை இறக்கி மோட்டார் மூலம் சகதிகளை மட்டும் பம்ப் செய்து எடுக்கும் பணியை துவக்கி உள்ளனர். நேற்று துவங்கிய இப்பணி 3 தினங்களுக்கு  நடைபெற உள்ளது. கிணறுகளில் உள்ள சேற்றை மோட்டர் மூலம் முழுவதுமாக உறிஞ்சி எடுக்கப்பட உள்ளது.

Related Stories: