×

ஏற்காட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏற்காடு, ஜன.21: ஏற்காட்டில்  சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்ஸ்பெக்டர் ஆனந்தன்  தலைமையில் நடநதது. இதையொட்டி ஒண்டிக்கடை, பஸ் நிலையம், காந்தி பூங்கா  உள்ளிட்ட மக்கள்  கூடும் இடங்களில் போலீசார் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். குறவன்   குறத்தி நடம் ஆடிய கலைஞர்கள், டூவீலரில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட்  அணிய வேண்டும். கார்களில் செல்பவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும். முடிந்த  அளவிற்கு பகல் நேரங்களில் பயணிப்பதுடன், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க  வேண்டும் என பாடல்பாடி, நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  நிகழ்ச்சியில் எஸ்ஐ ரகு மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையத்தில் ஏடிஎஸ்பி அன்பு, இன்ஸ்பெக்டர்  குணசேகரன் தலைமையில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  எமன் மற்றும் சித்ரகுப்தன் வேடமணிந்து சாலை விதிகளை கடைபிடிக்க வாகன  ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேட்டூர்: மேட்டூர் பேருந்து  நிலையம் எதிரே, மேட்டூர் வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை  சார்பில், நாடக கலைஞர்களை கொண்டு 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் டிஎஸ்பி சீனிவாசன்,  இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி ஆகியோர்  கலந்துகொண்டனர்.

Tags : Yercaud ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து