மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக 8ம் ஆண்டு நிறைவு விழா

மேட்டூர், ஜன.21: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில், கடந்த 8 ஆண்டுக்கு முன்,  மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நாளை மறுநாள் (23ம்தேதி) மகா கும்பாபிஷேக 8ம் ஆண்டு நிறைவு விழா நடக்கிறது. இதையொட்டி இன்று (21ம்தேதி) இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பிரவேச பலி பூஜை, பரிகார பூஜைகள் நடக்கிறது. நாளை (22ம்தேதி) அதிகாலை பாராயண பூஜை, உலக மக்கள் நலம் பெற மகா நவசண்டி யாகம் நடக்கிறது. 23ம்தேதி காலை மகா கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மேச்சேரி ஆதிபராசக்தி மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் சிறப்பு பாலாபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெறும். மாலையில் சுவாமி உட்பிரகார உலா நடக்கிறது. இத்தகவலை கோயில் செயல் அலுவலர் மற்றும் அருள்மிகு பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.   ..

Related Stories:

>