வாழப்பாடியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

வாழப்பாடி, ஜன.21: வாழப்பாடி பேரூர் திமுக, 4வது வார்டு மங்கம்மா சாலை  மாரியம்மன் திடலில், நகர செயலாளர் பி.சி.செல்வம் தலைமையில், திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,  இதில் கலைஞர் புகழ் வரவேற்று பேசினார். துக்கியாம்பாளையம் பழங்குடியின  பெண் கல்பனா, அதிமுகவை நிராகரிப்போம் என பேசினார். வாழப்பாடி  ஒன்றிய நிர்வாகி பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் சகாதேவன், 4வது வார்டு  அவைத்தலைவர் அய்யாதுரை, செயலாளர் காசிமன்னன், மாது, அன்பரசு,  பெரியகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம், வீரேந்திர துரை,  கோபிநாத், சுப்ரமணி, ஆட்டோ சுரேஷ், ஜெயலஷ்மி, ஆனந்த், ரத்தினம் உள்பட பலர்  கலந்துகொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார். 

Related Stories:

>