கருணாநிதி நினைவு சுழற்கோப்பை கைப்பந்து போட்டியில் பெருந்துறை அணி முதலிடம் மாவட்ட திமுக பொறுப்பாளர் பரிசு வழங்கினார்

நாமக்கல், ஜன.21: நாமக்கல் ஒன்றியம் சிங்கிலிபட்டியில், பொங்கல் பண்டிகையையொட்டி, திமுக இளைஞர் அணி சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவு சுழற்கோப்பைக்கான இரண்டு நாள் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதிப் போட்டியை மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார். இதில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஜி.பாய்ஸ் அணியினர் முதல் இடம், கே.என்.பிரதர் அணியினர் 2ம் இடம் பிடித்தன. அதைத் தொடர்ந்து முதலிடம் பிடித்த பெருந்துறை அணிக்கு, கருணாநிதி நினைவு சுழற்கோப்பை மற்றும் பரிசு தொகையை, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வழங்கி பாராட்டினார். விழாவில், மாநில நிர்வாகிகள் மணிமாறன், ராணி, ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாநில பார்கவுன்சில் உறுப்பினர் அய்யாவு, ஊராட்சி தலைவர்கள் சரளாஅய்யாவு, நலங்கிள்ளி, மாரப்பன், விஸ்வநாத், இளம்பரிதி, கோயில் மணி, வழக்கறிஞர் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>