இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 6 சட்டமன்ற தொகுதிகளில் 15,99,018 வாக்காளர்கள்

கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 15,99,018 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களே அதிகமுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2021ம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த டிசம்பர் 15ம் தேதி வரை படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ பெறப்பட்டு அதனை அலுவலர்கள் மூலம் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘மாவட்டத்தில் 15,99,018 பேர் கொண்ட இறுதிவாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான கிருஷ்ணகிரி, ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் மற்றும் 1,863 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பார்வைக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் வாக்காளர்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம்,’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், திமுக எம்எல்ஏக்கள் தளி பிரகாஷ், வேப்பனஹள்ளி முருகன், ஓசூர் சத்யா, முன்னாள் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி தலைவர் நந்தகுமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருதயம், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் கிருஷ்ணகிரி கற்பகவள்ளி, ஓசூர் குணசேகரன், நகராட்சி ஆணையர் சந்திரா, அனைத்து தாசில்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: