300 கிராமங்களில் மக்கள் கிராம சபை

ஓசூர், ஜன.21: ஓசூர் எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் கூறியபடி, கடந்த 23ம் தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் 300 மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தியுள்ளோம். அதில் ஒரு லட்சத்திற்கு மேலான மக்கள் கலந்து கொண்டு திமுகவை ஆதரிப்போம் என தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர். தமிழகத்தில் அதிமுகவை நிராகரித்து ஒரு கோடியே ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 34 பேர்  ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.  அனைத்து கூட்டங்களிலும் பொதுமக்கள் அதிமுக ஆட்சி குறித்து பல பிரச்னைகளை கூறி இருக்கிறார்கள். அதை வைத்து பார்க்கும்போது மக்கள் இந்த ஆட்சியை நிராகரிக்க தயாராகி விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன், மாணவரணி ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>