கால்நடை மருத்துவமனை கட்ட பூமி பூஜை

தேன்கனிக்கோட்டை, ஜன.21: தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை, மல்லசந்திரம், அரசகுப்பம், மருதன்பள்ளி கிராம விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ₹40 லட்சம் மதிப்பில், பெண்ணங்கூர் கிராமத்தில் கால்நடை மருந்துவமனை கட்ட தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகாமுனிராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் துரைசாமி, வெங்கடராஜ், ரகு, ஒன்றிய கவுன்சிலர் திம்மராயப்பா, கூட்டுறவு வங்கி தலைவர் ரவிகுமார், ஜெயராம்ரெட்டி, மருதனப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சந்திராரெட்டி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>