சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தியில்; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்கக் கூடாது என்றும், பகைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்றும், அன்பும், அறமும் தான் மனிதநேயத்தின் அடிப்படை என்றும், இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான் ஆவார். இந்த இனிய கிறிஸ்துமஸ் தின நன்னாளில், மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும்,
அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை தங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். தன்னலமற்ற சேவையாற்றும் மனப்பாங்கை கிறிஸ்துமஸ் நமக்கு கற்றுத் தருகிறது. இந்த புனித நாளில் அன்பையும், அமைதியும், நமக்கு போதித்த இயேசு பிரான் அவர்களை பிரார்த்திப்போம் வணங்குவோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
