×

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் 23,32,886 வாக்காளர்கள்

திருச்சி, ஜன.21: திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 23,32,886 வாக்காளர்கள் உள்ளனர். கூடுதலாக 72,447 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு கூறினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர்ம அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. கலெக்டர் சிவராசு அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, திருச்சி மேற்கு தொகுதியில்- 2,68,379, திருச்சி கிழக்கு- 2,54,427, ரங்கம்- 3,10,739, திருவெறும்பூர்- 2,91,891, லால்குடி- 2,17,526, மண்ணச்சநல்லூர்- 2,43,272, மணப்பாறை- 2,88,990, முசிறி- 2,32,117, துறையூர்- 2,25,545 என மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 11,33,020, பெண் வாக்காளர்கள் 11,99,635ம், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 231 என மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டது. கடந்த 16.11.2020 அன்று 22,60,439 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது கூடுதலாக 72,447 உள்பட மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 11,33,020ம், பெண் வாக்காளர்கள் 11,99,635ம் மற்றும் மூன்றாம் பாலினம் 231ம் உள்ளனர். இதுவரை திருச்சி மாவட்டத்தில் 2,531 வாக்குச்சாவடிகள் இருந்தன. தேர்தல் ஆணையம் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என கூறியதால், 901 வாக்குச்சாவடி கூடுதலாக அமைகிறது. மொத்த வாக்குச்சாவடி 3,432 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக அமையும் 901 வாக்குச்சாவடிகளில் 880 அதே இடத்தில் வரும். மீதமுள்ள 21 மட்டும் வேறு இடத்தில் அமையும். வார்டுக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி 31ம் தேதிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்எல்சி முடிந்துவிடும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்யும் பணி தொடரும். இவ்வாறு கலெக்டர் சிவராசு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயப்ரீதா, தேர்தல் தாசில்தார் முத்துசாமி மற்றும் திமுக மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ராவணன், முத்துக்கருப்பன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வம், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : voters ,district ,Trichy ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...