×

டெல்லியில் 5ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்..!!

புது டெல்லி: டெல்லியில் 5ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ரூ.12,015 கோடியில் 16 கி.மீ. தூரத்தில் 13 மெட்ரோ ரயில் நிலையங்களை உள்ளடக்கிய வழித்தடத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ராமகிருஷ்ணா ஆசிரமம் – இந்திர பிராசதா வரை ரூ.9,570 கோடியில் புதிய மெட்ரோ வழித்தடத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. டெல்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க்கின் மொத்த நீளம் 400 கி.மீ. கடந்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.

Tags : Delhi ,Union Cabinet ,New Delhi ,Ramakrishna Ashram ,Indra… ,
× RELATED நடிகைகள் ஆடை குறித்து ஆபாச பேச்சு;...