திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் 37வது பேரவைக்கூட்டம்

திருச்சி, ஜன.21: திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் 37வது திருமண்டல பேரவைக்கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் திருமண்டல பேராயர் டாக்டர் சந்திரசேகரன் தலைமையில் கடந்த 14 முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது.

திருமண்டல குருத்துவ செயலர் சுதர்சன், இறைமக்கள் செயலர் ரவிகுமார், பொருளர் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடத்தினர். கூட்டத்தில் ஆனைமலை முதல் நாகப்பட்டினம் வரை உள்ள திருச்சபை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆயர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக வேலூர் திருமண்டல பேராயர் சர்மா நித்தியானந்தம் கலந்துகொண்டு ‘அன்பும் சமத்துவத்துடன் கூடிய கூட்டுறவை நோக்கி’ என்ற தலைப்பில் செய்தி வழங்கினார்.

இக்கூட்டத்தில் திருமண்டல தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக திருமண்டல குருத்துவ செயலராக சுதர்சன், திருமண்டல இறைமக்கள் செயலராக ஸ்டேன்லி மதிசெல்வன், திருமண்டல பொருளராக ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2ம் கட்டமாக திருமண்டல மறைமாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 15 நபர்களில் 8 நபர்கள் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமண்டலத்தின் 8 மறைமாவட்டங்களுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

2ம் நாள் மாலை சிறப்பு செய்த டாக்டர் ஜான் சாமுவேல் (முதல்வர் குருக்குல் இறையியல் கல்லூரி, சென்னை) அவர்களால் வழங்கப்பட்டது. 3ம் நாள் காலையில் மாநில அளவில் விருது பெற்றவர்களை கவுரவித்தனர். அதோடு ஓய்வுபெற்ற ஆயர்கள், திருப்பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு அளித்து கவுரவித்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள், ஆயர்கள், அன்பர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவருக்கும் பேராயர் சிறப்பு ஆராதனையின் வாயிலாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். குருத்துவ செயலர் சுதர்சன் நன்றி கூறினார்.

Related Stories:

>