திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

திருச்சி, ஜன.21: திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. 7.5 சதவீத இடஒதுக்கீடு முதலாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் அனுஷியா பேகம் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் வனிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில் ‘நீங்கள் டாக்டராகும் நீண்ட நாள் கனவு இன்று பலித்திருக்கிறது. கவனமாக பயில வேண்டும். அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பூக்கொல்லையை சேர்ந்த சஹானா என்ற மாணவிக்கு மருத்துவ படிப்புக்கு ஆகும் மொத்த செலவை அரசே ஏற்கும். இந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு புதிய ஹாஸ்டல் திறக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நல்ல முறையில் சாப்பாடு இங்கு கிடைக்கும். பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் குழந்தைகளுக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி தந்து விடாதீர்கள்’ என்றார்.

அரசு உள் இட ஒதுக்கீட்டால் இடம் பெற்ற 10 மாணவ, மாணவிகள் உள்ளிட்ட முதலாமாண்டு மாணவ, மாணவிகள் 150 பேரையும் அங்கு பயிலும் மாணவிகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் மாணவ, மாணவிகள் வெண்ணிற கோட் அணிந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் டாக்டர்கள் ஏகநாதன், பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>