திருச்சியில் குடியரசு தின விழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

திருச்சி, ஜன.21: திருச்சி மாவட்ட குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசுகையில், ‘வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. காலை 8.05 மணி அளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கோவிட்-19 காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளனர். குடியரசு தினவிழா சிறப்புடன் நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றார். கூட்டத்தில் டிஆர்ஓ பழனிகுமார், கலெக்டரி–்ன் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரீத்தா, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>