திருச்சி மாநகராட்சியில் மெகா தூய்மை பணி துவக்கம்

திருச்சி, ஜன.21: திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் குப்பைகள் தேங்கியுள்ள இடங்களை தேர்வு செய்யப்பட்டு மெகா தூய்மை பணி 15வது, வார்டு தாராநல்லூர் கீரைக்கொல்லை பஜார் பகுதியில் நேற்று துவங்கியது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், 200  தூய்மை பணியாளர் களைக்கொண்டு  துவக்கி வைத்து பேசுகையில், திருச்சி மாநகராட்சியில் தற்போது மெகா தூய்மை பணி துவங்கப்பட்டுள்ளது. மாநகரில் தினமும் 2 மணி முதல் 5மணி வரை மெகா தூய்மை நடக்க உள்ளது. இந்த திட்டத்தின்படி சாக்கடையை தூர்வாருதல், பொதுஇடங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனை தொடர்ந்து மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளில் சீரமைக்கும் பணிகள், தெருவிளக்கு பிரச்னைகள் சரிசெய்யப்பட உள்ளது. குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். பொது கழிப்பிடங்களில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும். இன்னும் ஒரு மாதத்தில் அனைத்தும் சரிசெய்யப்பட்டு சிறந்த நகரமாக மாற்றப்படும். திருச்சி மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றார்.

Related Stories: