திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் சாலை பணி துவங்காவிடில் போராட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.21: திருத்துறைப்பூண்டி நகர்ப்புற சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறி மோசமான நிலையில் உள்ளது. தற்காலிகமாக ஜல்லி, சிமெண்ட், காரைகள் கொட்டி நிரப்புவதால் பஸ்கள் செல்லும்போது தூசுகள் பெரும்புகை போல கடைகளில் படிந்து நுகர்வோருக்கும் கடை வைத்திருக்கும் வணிகர்கள், பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுடன் கடையில் உள்ள சரக்குகள் கெட்டுப்போகிறது. உடனடியாக சாலை பணிக்கு டெண்டர்விட்டு போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்று கடந்த 31ம் தேதி நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு வர்த்தகர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்ட பிறகு டெண்டர் விடப்பட்டது. ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும் சாலை பணி துவங்கப்படவில்லை. சாலை பணியை உடன் துவங்கவில்லை என்றால் வர்த்தகர் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று வர்த்தகர் சங்க தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: