புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய வழக்கில் தொடர்புடைய பாஜகவை சேர்ந்த முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தியை ஓசூரில் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு ஜிஎஸ்டி வரி கட்டாமல் மோசடி செய்து வந்ததாகவும், இதற்கு சத்தியமூர்த்தி உடந்தையாக செயல்பட்டு ரூ.12 கோடி பெற்றதாகவும் இவ்வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
