எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வலியுறுத்தல் மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பில் ரேஷன் கடையை பாதுகாத்திட விவசாயிகளை ஆதரிப்போம் துண்டு பிரசுரம் வழங்கல், கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி, ஜன.21: அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிப்போம், ரேஷன் கடைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் வழங்கல் மற்றும் கையெழுத்து இயக்கம் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமையில் மன்னார்குடி ஆயுள் காப்பீட்டு கழக அலுவலகம் எதிரில் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை சங்க செயலாளர் அப்துல்ராசக் துவக்கி வைக்க செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் முதல் கையெழுத்திட்டார். இதுகுறித்து, மாவட்ட செயலாளர் பொன்முடி கூறுகையில், அனைவருக்கும் உணவை உறுதி படுத்திடும் வகையில் ரேஷன் கடைகளை பாதுகாத்திட விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து, கார்பரேட் மட்டுமே பலன் பெறும் தனியார் மயத்தை எதிர்க்கிறோம். மேலும் ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழியாக பொருட்கள் வருகிறது. 1972ம் ஆண்டு சிவில் சப்ளைஸ் கார்பரேஷன் தொடங்கப்பட்டது. தமிழக அரசுக்கு உணவு பொருட்கள் இந்திய உணவு கழகத்திலிருத்து வருகிறது. இந்திய உணவு கழகம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் 1942ம் ஆண்டு பஞ்சத்தின்போது திட்டமிடப்பட்டு 1965ல் முதன் முதலில் தலைமையகம் சென்னையில் தொடங்கப்பட்டு, பின்பு தஞ்சாவூரில் மாவட்ட கழகம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலுள்ள மாநில அரசுகளின் மூலம் உருவாக்கப்பட்ட மண்டிகள், ஒழு ங்கு முறை விற்பனைக்கூடம் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து உரிய நியாயமான விலையில் விவசாய பொருட்களை பெற்று, இந்திய உணவு கழகம் மூலமாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. தற்போதைய வேளாண் சட்டங்களால் கொள்முதல் நிலையங்கள் மூடிவிட்டு தனியார் மூலம் கொள்முதலையும், சேமிப்பு கிடங்குகளையும் கைப்பற்ற இச்சட்டம் வழிவகுக்கிறது. ரேஷன் கடைகளை மூடவும், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளது. எனவே, ரேஷன் கடைகளை பாதுகாப்போம் விவசாயிகளை ஆதரிப்போம் என்கிற துண்டு பிரசுரங்களை அகில இந்திய அளவில் பொதுமக்களிடம் கொடுத்து கையெழுத்து பெற்று அதனை அரசிடம் வழங்க உள்ளோம் என்றார்,

Related Stories:

>