தாலுகா, விஏஓ அலுவலகங்களில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

நீடாமங்கலம், ஜன.21: நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் ஒன்றிய தலைவர் பூசாந்திரம் தலைமையில் தாலுகா அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் ஜோசப், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் கிஷோர்குமார், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய, நகர குழு சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட பொருளாளர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அழுகிய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். 100 சதவீத இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யதிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இேதபோல் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.10,000 நிவாரணம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தில்லைவிளாகம், இடும்பாவனம் விஏஓ அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் 1,300க்கும் மேற்பட்ட மனுக்கள் விஏஓவினரிடம் அளித்தனர்.

Related Stories: