டீன் தகவல் நீடாமங்கலம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

நீடாமங்கலம், ஜன.21: நீடாமங்கலம் பகுதி பள்ளிகளில் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆய்வு செய்தார். நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு ஆய்வு மேற்கொண்ட நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் சுகாதார வளாகம் மற்றும் வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டதை உறுதி செய்தார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் கலைசெல்வம், பொறியாளர் சுகந்தி, கிராம ஊராட்சி தலைவர் மாலதி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>