பொதுமக்களும் பாதிப்பு திருவையாறு அந்தணர்குறிச்சியில் பயோமெட்ரிக் மெஷின் கோளாறால் ரேஷன் பொருள் பெறுவதில் சிக்கல்

திருவையாறு. ஜன.21: திருவையாறு அந்தணர்குறி–்சசியில் பயேமெட்ரிக் மெஷின் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரேஷன் பொருட்கள் பெறுவதில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திருவையாறு அந்தணர்குறிச்சியில் எண் 3 மற்றும் 4 ஆகிய எண் கொண்ட நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மூன்று தினங்களாக பொதுமக்களுக்கு ஷேன் பொருட்கள் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் சென்று கடையில் கேட்டால் பயோமெட்ரிக் இயந்திரம் பழுதாகி உள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறினால், பழுது சரிசெய்யும் மெக்கானிக்கை அனுப்புகிறோம் என்று கூறுகின்றனர் என்று நியாய விலைகடையில் வேலைபார்க்கும் சேல்ஸ்மேன் தெரிவித்தார்.

இது சம்மந்தமாக அந்தணர்குறிச்சியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் திருவையாறு தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி மாலதியிடம் முறையிட்டார். அதற்கு அதிகாரி இயந்திரத்தை உடனே சரிசெய்யப்படும் என்று கூறினார்.

இதனால் திருவையாறு நகரில் 3 மற்றும் 4 ம் எண்ணில் வசிக்கும் பொதுமக்கள் நியாய விலை கடைகளில் உணவுப்பொருடக்கள் மண்ணனெண்னை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி மாற்று ஏற்பாடு செய்து ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: